கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டார். கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. SETC, TNSTC, PRTC ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கு வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதற்காக 88.52 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: