பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றம்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், காந்திமதிநாதன், மேலாளர் (நிர்வாகம்) சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மாரிமுத்து, கண்ணியப்பன், டில்லிகுமார், யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியாசெல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சிவகாமி சுரேஷ், சத்யபிரியமுரளிகிருஷ்ணன், கௌதமன், கண்ணன் மற்றும் மற்றும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசியதாவது:

* மாரிமுத்து: பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற ஏதுவாக சிம்டிஏ நிதி ரூ.15 லட்சத்தை உயர்த்தி ரூ.25 லட்சமாக வழங்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

* உமாமகேஸ்வரி சங்கர்: நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யமுனா நகர், நடராஜ் நகர், அன்பரசு நகர், கண்ணப்ப நகர் ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு முறையும் மழை நீர் 3 மாதங்களாக வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

* டில்லி குமார்: சென்னீர்குப்பம் ஊராட்சியில் உள்ள தொழிற்சாலைகள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெறாமல் செயல்பட்டு வருகின்றன. இதற்காக குழு அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்.

* கன்னியப்பன்: ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலையை நிறுவ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சிவகாமி சுரேஷ்: கடந்த மாதம் பெய்த மழையால் பாரிவாக்கம் ஊராட்சியில் மழைநீர் தேங்கி வீட்டுக்குள் புகுந்து விட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டுகளை தூர்வாரி உடனடியாக சீரமைக்க வேண்டும். ஏரியை தூர்வாரி உபரி நீர் வெளியேறும் வகையில் கல்வெட்டுகள் அமைக்க வேண்டும்.

* கவுதமன்: காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு வந்த சிஎம்டிஏ நிதி ரூ.1 கோடியை வேறு ஊராட்சிகளுக்கு அனுப்பி வைத்ததால் தங்களது ஊராட்சியில் பணி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு வரும் சிஎம்டிஏ நிதியை அதிகாரிகள் வேறு ஊராட்சிக்கு மாற்றினால் வழக்கு தொடர்வேன். இதனைத் தொடர்ந்து மேல்மணம்பேடு, வயலாநல்லூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பேவர் பிளாக் சாலைகள், அரசு பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் சீரமைத்தல், மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய்கள், பேவர் பிளாக் சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: