CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு ( CUET) மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(CUET) என அழைக்கப்பட்டது, இந்தியாவின் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு இளநிலை, ஒருங்கிணைந்த, முதுகலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வாகும். இதனை இந்தியாவில் உள்ள பிற மாநிலப் பல்கலைக்கழகங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொள்கின்றன

நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, வருகிற மார்ச் 2024 முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இத்தேர்வில் +2 தேர்வில பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இத்தேர்வுகளை தேசியத் தேர்வு முகமை நடத்தும். இதனை தொடர்ந்து 36 மத்திய பல்கலைக்கழங்கள், 8 மாநில பல்கலைக் கழகங்கள், 5 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 2 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மொத்தம் 51 பல்கலைக்கழகங்களுக்கான முதுநிலை பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

https://pgcuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இன்று முதல் ஜனவரி 24ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். பணம் செலுத்துவதற்கு ஜனவரி 25 கடைசி தேதி ஆகும் பணம் செலுத்த டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, மூலம் செலுத்தலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகளை சரிசெய்வதற்கு ஜனவரி 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நகரங்களை மார்ச் 4ம் தேதி வெளியிடும். தேர்வுக்கான நுழைவுசீட்டை மார்ச் 7ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத் தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். தேர்வு நேரம் 1.45 மணி நேரம். இதில் 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் திருத்தம் (களை) மிகவும் கவனமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாது. தகுதி, தேர்வுத் திட்டம், தேர்வு மையங்கள், தேர்வு நேரங்கள், தேர்வுக் கட்டணம், விண்ணப்பிப்பதற்கான நடைமுறை போன்றவை பற்றிய தகவல்கள் NTA https://pgcuet.samarth.ac.in இன் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் கேள்விகள் அல்லது / தெளிவுபடுத்தல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் NTA உதவி மையத்தை 011 4075 9000 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது cuel-pg@nta.ac.in என்ற இணையதளத்தில் சந்தேகங்களை தெரிவிக்கலாம்.

தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் மாறும், பங்கேற்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் மாறும் பதிவு செயல்முறை முடியும் வரை. விண்ணப்பதாரர்கள் NΤΑ ஐ தவறாமல் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்

The post CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: