பேரிடர் நிவாரண நிதியை போதிய அளவிற்கு ஒன்றிய அரசு வழங்கவில்லை: அகில இந்திய பார்வர்டு பிளாக் கண்டனம்

 

தேனி, டிச. 25: தேனியில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேசிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின்போது, வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நேதாஜி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகை அரசு அறிவித்துள்ளதை பாராட்டுவதோடு, இந்த நிவாரண உதவித்தொகையை இரட்டிப்பாக வழங்க வேண்டும் எனவும்,

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு போதிய அளவு வழங்காமல் இருப்பதை கண்டிப்பதோடு, ஒன்றிய அரசு விரைவாக அதிக நிதி வழங்க வேண்டும் எனவும், சீர்மரபினர் சமுதாயத்திற்கு இரட்டை சான்றிதழ் வழங்குவதை தவிர்த்து டிஎன்டி என ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், மத்தியக் குழு உறுப்பினர்கள் சவுராஜ், நல்லமுத்து, ராஜசேகர், மாநில செயலாளர்பாலுமோகன், ஈரோடு கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பேரிடர் நிவாரண நிதியை போதிய அளவிற்கு ஒன்றிய அரசு வழங்கவில்லை: அகில இந்திய பார்வர்டு பிளாக் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: