2.5 கோடியில் துணை சுகாதார நிலையம்தில்லைவிளாகத்தில் பெய்த சாரல் மழைக்கு100 நாள் வளர்ந்த சம்பா பயிர் சாய்ந்தது

முத்துப்பேட்டை, டிச. 25: முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் பெய்த சாரல் மழைக்கு 100 நாள் வளர்ந்த சம்பா பயிர் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.முத்துப்பேட்டை வட்டாரத்தில் நடப்பாண்டு விவசாயிகள் குறுவை, 2ம் குறுவை, தாளடி, சம்பா என சாகுபடி செய்து வந்தனர். இதில் சம்பா மற்றும் குறுவை போதிய நீர் கிடைக்காமல் கருகியது. தாழ்வான பகுதியில் பெய்த மழைக்கு அழுகியது. இப்படி பாதிப்புக்களுக்கு இடையே விவசாயிகளின் சாகுபடி பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து 3 தினங்களாக சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. சில நேரங்களில் கடற்கரை கிராமத்தில் கூடுதல் காற்றும் வீசி வந்தது.இதில் சில இடங்களில் சாகுபடி பயிர் காற்றுக்கு சாய்ந்தது. இதில் குறிப்பாக முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை கிராமத்தில் சம்பா சாகுபடி பணிகள் நடந்து வந்தது. தற்போது பயிர்கள் 100 நாட்களை எட்டிய நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த சாரல் மழை மற்றும் லேசான காற்று வீசியதால்
சுமார் 25 ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தில்லைவிளாகம் முன்னோடி விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில், நீர் பற்றாகுறை, கனமழை போன்றவைகளிலிருந்து காப்பாற்றி கொண்டு வரப்பட்ட சம்பா பயிர், தற்போது சாரல் மழையுடன் வீசிய காற்றால் பயிர் சாய்ந்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் இந்த சாய்ந்த பயிர் எந்த பயனுமில்லாமல் போய்விடும் என கவலை தெரிவித்தனர்.

The post 2.5 கோடியில் துணை சுகாதார நிலையம்தில்லைவிளாகத்தில் பெய்த சாரல் மழைக்கு100 நாள் வளர்ந்த சம்பா பயிர் சாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: