மதுக்கடையை 10 நாளில் மூடாவிட்டால்பூட்டு போட்டு சிறைக்கு செல்ல தயார்

மேட்டூர், டிச.25: மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், நேற்று மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே உள்ள அரசு மதுக்கடை அருகேஇ செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: மேட்டூர் அனல் மின்நிலையம் எதிரே உள்ள அரசு மதுக்கடையில், தமிழகத்திலேயே அதிக மது விற்பனை நடைபெறுகிறது. அனல் மின் நிலையத்திற்கு எதிரே இருப்பதால், அனல் மின் நிலையத்திற்கு பணிபுரிய வரும் பணியாளர்களும், சாம்பல் பாரம் ஏற்றும் லாரி டிரைவர்களும் மது அருந்த செல்கின்றனர். இவர்கள் ஒருவழிப் பாதையில் திரும்பிச்செல்வதால், எதிரே வரும் வாகனங்களில் மோதி அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. மது அருந்தி பணிக்கு செல்லும் பணியாளர்களால் அனல் மின் நிலையத்திலும் விபத்துகள் ஏற்படுகிறது. முக்கிய சாலையில் மதுக்கடை அமைந்துள்ளதால் லாரிகளும், டூவீலர்களும் ஒரு கி.மீ., நீளத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. நடப்பாண்டு மட்டும் 4பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மது அருந்தி செல்லும்போது அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் விழுந்து, 4 பேர் இறந்துள்ளனர். ஏராளமான பெண்கள் மதுவால், தங்களது தாலியை இழந்துள்ளனர். எனவே, தமிழக முதல்வர், மதுவிலக்கு அமல் துறை அமைச்சர் தலையிட்டு, இங்குள்ள மது கடையை மூட வேண்டும். 10 நாட்களில் மதுக்கடையை மூடாவிட்டால், நானும், பாமக மாவட்ட செயலாளரும் இணைந்து, 25 ஆயிரம் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி மதுக்கடையை பூட்டுவேன். இதனால் சிறைக்கு செல்லவும் அச்சப்பட மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மதுக்கடையை 10 நாளில் மூடாவிட்டால்பூட்டு போட்டு சிறைக்கு செல்ல தயார் appeared first on Dinakaran.

Related Stories: