விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், முதல் பாதியில் 19- 14 என உ.பி. முன்னிலை வகித்தது. ஆனால் 2வது பாதியில் குஜராத் ஆதிக்கம் செலுத்தி 24 புள்ளி குவித்தது. ஆனால் உபி.யால் 11 புள்ளி தான் எடுக்க முடிந்தது. இதனால் 38-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் 4வது வெற்றியை ருசித்தது. குஜராத் ரைடர் ராகேஷ் அதிகபட்சமாக 14 புள்ளி எடுத்தார். உபி. 4வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 8 மணிக்கு யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ், இரவு 9 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
The post புரோ கபடி லீக்; யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ் பெங்களூரு-தெலுங்கு மோதல் appeared first on Dinakaran.