அத்தாணி வேம்பத்தி கிராமத்தில் புற்றுநோய்-டெங்கு விழிப்புணர்வு முகாம்

 

ஈரோடு,டிச.22: ஈரோடு மாவட்டம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வேம்பத்தி கிராமம் தோட்ட குடியாம்பாளையத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் புற்றுநோய் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.

இதில், சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட நோக்கம், பயன்கள், புற்றுநோய் வகைகள் அதன் பாதிப்புகள், புற்றுநோய்க்கான காரணிகள்,புற்று நோய்க்கான பரிசோதனை கிடைக்கும் இடங்கள், பரிசோதனையின் அவசியம், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் உடல் பாதிப்புகள்,புகையிலை தடுப்பு சட்டங்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள்,

காய்ச்சல் கண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள், மக்களை தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதின் அவசியம், சரிவிகித சமச்சீர் உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.

மேலும், குடியாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு மற்றும் மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அத்தாணி வேம்பத்தி கிராமத்தில் புற்றுநோய்-டெங்கு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: