ஐயப்பன் கோயில் ஆண்டு விழா

அரூர், டிச.21: அரூர் மேல்பாட்சாப்பேட்டை சக்தி விநாயகர் ேகாயிலில் அமைந்துள்ள ஐம்பொன் பாலகுரு ஐயப்ப சுவாமிக்கு, 20ம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி காலை மகாசுதர்ஸன ஹோமம், பூஜைகள் நடந்தது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்பன் திருவீதி உலா, கோயிலில் துவங்கி பாட்சாப்பேட்டை, கடைவீதி, பஸ் நிலையம், திருவிக நகர், கச்சேரி மேடு, பைபாஸ் சாலை வழியாக வந்தது. வழி முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குருசாமிகள் சுரேஷ், தம்பிதுரை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post ஐயப்பன் கோயில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: