ராயபுரம் சிமின்ட்ரி சாலையில் 1000 குடும்பத்துக்கு வெள்ள நிவாரணம்: எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வழங்கினார்

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பத்துக்கு வெள்ள நிவாரண உதவிகளை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும்படி தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப் பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கி வரு கிறார்கள்.

இந்நலையில், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை மாடன் லைன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 1000 பேருக்கு எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஏற்பாட்டில் அரிசி, பெட்ஷீட், பிஸ்கட் தண்ணீர் பாட்டில், மளிகைபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமை வகித்தார். ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷ் ஆகியோர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இதில், ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ். வட்ட செயலாளர்கள் கொரியர் முருகன், கவுரீஸ்வரன் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post ராயபுரம் சிமின்ட்ரி சாலையில் 1000 குடும்பத்துக்கு வெள்ள நிவாரணம்: எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: