கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1039 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு முதலில் சீனாவில் பரவிய கொடிய வைரஸான கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இந்த கொரோனாவால், கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சமீப காலமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் சில பகுதிகளில் இருந்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1039 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து, அங்கு மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1185 பேர் பாதித்துள்ள நிலையில், கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: