நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி சாதனை படைத்த மாணவர்களுக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பாராட்டு

கோவில்பட்டி, டிச. 14: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சியில் கடந்த 3ம் தேதி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவிகள், ராஜலட்சுமி என்பவர் தலைமையில் பங்கேற்று ஆரி ஒர்க் போட்டியில் சாதனை படைத்தனர். இவர்களுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிகள், நிர்வாகி பரமேஸ்வரி தலைமையில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பாராட்டினார்.

The post நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி சாதனை படைத்த மாணவர்களுக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: