கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, டிச.14: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு ராபி பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா 4,269 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,685 மெட்ரிக் டன், பொட்டாஷ் 678 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 6,377 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 188 மெட்ரிக் டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு சாகுபடி பரப்பிற்கு தேவைப்படும் அளவில் மட்டுமே, உரம் விநியோகம் செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும். விலைப்பட்டியல் மற்றும் உரங்களின் இருப்பு விவரம், விவசாயிகள் அறியும் வகையில், தகவல் பலகை பராமரிக்கப்பட வேண்டும்.

உரம் வாங்கும் விவசாயிகளிடம், உரிய கையொப்பம் பெறுவதோடு ரசீது வழங்க வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உர மூட்டையில், அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல், விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985க்கு மீறுதலாக, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவனமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, உரிய ரசீது வழங்கவில்லை என்றாலோ விற்பனை உரிமத்தில் உள்ள முதன்மை சான்றுகள் தவிர, பிற உரங்களை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: