சென்னை: சென்னை தலைமைசெயலகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள வந்திருக்கும் மத்திய குழுவிடம் விரிவான விவரங்களை சமர்ப்பிக்கும்படி நீர்வளத்துறை உயர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார். மேலும் 2024-2025ம் ஆண்டு நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய வரைவுத்திட்டங்களுக்கான தேவைப்படும் நிதியினை முன்மொழிவதற்கும், நீர்வளத்துறை உயர்அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் கலந்தாலோசித்தார். இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைப்பொறியாளர் முத்தையா, தலைமை பொறியாளர் சென்னை மண்டலம் அசோகன், தலைமை பொறியாளர் திட்ட உருவாக்கம் பொன்ராஜ், மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றிய குழுவிடம் விரிவான விவரங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.