இங்கு குழிப்பாந்தண்டலம் ஊராட்சி பகுதியில் ஆபத்தான 4 வளைவுகளில் அதிகளவு வேலிகாத்தான் மரங்கள் வளர்ந்து, சாலையில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. வேலிகாத்தான் மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வேலிகாத்தான் உள்ளிட்ட மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேலிகாத்தான் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வேலிகாத்தான் மரங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
