ரூ.6 ஆயிரம் நிவாரணம் காங்கிரஸ் வரவேற்பு

சென்னை: மிக்ஜாம் புயல், மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை வழங்கப்பட்ட நிவாரண உதவி தொகையிலேயே இது தான் அதிகத் தொகையாகும்.

அதேபோல், பயிர், மரங்கள், கால்நடை, வீடு இழப்பு, உயிரிழப்பு போன்றவற்றுக்கும் நிவாரண உதவி தொகையை உயர்த்தி, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை முதல்வர் ஏற்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் களத்தில் நின்று முதல்வரும், அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் மீட்புப் பணிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது. அத்தகைய வரலாற்றைப் படைத்து, இதுதான் சமூக நீதியைப் போன்றும் திராவிட மாடல் அரசு என்று மீண்டும் நிரூபித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் சார்பில் நன்றியுடன் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ரூ.6 ஆயிரம் நிவாரணம் காங்கிரஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: