மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை : தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை போதுமானதல்ல. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15,000 நிவாரணம் அளிக்க வேண்டும். தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கட்டில் மெத்தை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு பழுதடைந்துள்ளது. அவற்றிற்கான இழப்பீடு எதுவும் அறிவிக்க வில்லை. அவற்றை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி வலைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் வழங்க வேண்டும்.

 

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: