வரும் 16ம் தேதிக்கு பாஜ பாதயாத்திரை ஒத்திவைப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ேநற்று வெளியிட்ட அறிக்கை: ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம், கடந்த ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி, 119 சட்டமன்ற தொகுதிகளில் நடந்துள்ளது. சமீபத்திய சென்னை புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாதயாத்திரையை தள்ளி வைத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துவது, நன்மை பயக்கும் என்று நம்புகிறோம்.

எனவே டிசம்பர் 11ம் தேதி மீண்டும் தொடங்குவதாக இருந்த நடை பயணத்தை, வரும் 16ம் தேதிக்கு மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை சென்னை முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிவாரணப் பொருட்களையும் உதவிகளையும், தொய்வில்லாமல் தொடர துணை நிற்க விரும்புகிறோம்.

 

The post வரும் 16ம் தேதிக்கு பாஜ பாதயாத்திரை ஒத்திவைப்பு: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: