சென்னை: தமிழ்நாட்டில் 7 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி டவுன் டிஎஸ்பியாக இருந்த சத்தியராஜ், சேரன்மகாதேவி டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் டிஎஸ்பியாக இருந்த தங்கராமன், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டிஎஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் டிஎஸ்பியாக இருந்த சந்திரதாசன், தூத்துக்குடி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நாங்குநேரி டிஎஸ்பியாக இருந்த அசோக் தஞ்சை புறநகர் சப்-டிவிசன் டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டிஎஸ்பியாக இருந்த தையல் நாயகி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், ஈரோடு மாவட்டம் பெருந்துறை டிஎஸ்பியாகவும், ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா திருவாரூர் முத்துப்பேட்டை சப்-டிவிசன் டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 7 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.