×

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது. மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 10ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அரசு விடுமுறை என்பதால், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் சரயு தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களும், மனித உரிமைகள் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) புஷ்பா, (வளர்ச்சி) ராஜகோபால், அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், தாட்கோ பொது மேலாளர் வேல்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Human Rights Day ,Krishnagiri ,Krishnagiri Collector ,Office ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...