×

கோபியில் அகற்றப்பட்ட ஆர்ச்சை மீண்டும் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தல்

 

ஈரோடு,டிச.9: கோபியில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட ஆர்ச் மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தி உள்ளது.  தமாகாபொதுச்செயலாளர் விடியல்சேகர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோபி நகர எல்லையில் காமராஜர் முதல்வராக இருந்த போது கோபியில் நடைபெற்ற 45வது அரசியல் மாநாடு நினைவாக ஆர்ச் திறந்து வைக்கப்பட்டது.

கோபி நகரின் அடையாள சின்னமாக பாரம்பரியத்தை பறை சாற்றும் சான்றாக விளங்கிய 2 ஆர்ச்சுகளை சாலை விரிவாகத்திற்காக அகற்றப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க வளர்ச்சி பணி என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும். எனவே சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததும் அதே இடத்தில் ஆர்ச்சுகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நகராட்சி ஆணையரிடம் மனு:இந்நிலையில் நேற்று ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.வி.சரவணன், முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.என்.நல்லசாமி, நகர காங்கிரஸ் கட்சி தலைவர் மாரிமுத்து,நிர்வாகி உதயகுமார், செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோபி நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில்,சாலை விரிவாக்க பணிகள் முடிவுற்ற பிறகு மீண்டும் நுழைவு வாயில் அமைத்து காமராஜர் திறந்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

The post கோபியில் அகற்றப்பட்ட ஆர்ச்சை மீண்டும் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Erode ,Tamaka ,Dinakaran ,
× RELATED கோபி அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து..!!