×

4 நாள் வெயிலுக்குப் பின் ஈரோட்டில் சாரல் மழை

 

ஈரோடு,டிச.9:கடந்த 4 நாள்களாக வெயில் அடித்து வந்த நிலையில், நேற்று காலையில் ஈரோட்டில் சாரல் மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மிக்ஹங் புயல் காரணமாக கடந்த 5 நாள்களுக்கு முன்னர் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் அடித்து வந்தது. மழையளவும் பூஜ்ஜியமாக இருந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்னரும்,நேற்று முன் தினமும் வெயிலின் அளவு சற்று அதிகரித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் காலை 6 மணி நிலவரத்தின்படி, வறட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் மட்டும் 113 மி.மீ மழை பெய்திருந்தது.

அம்மாபேட்டையில் 4 மி.மீ. மழை பதிவாகி மாவட்டத்தில் மொத்தம் 117 மி.மீ. மழை பெய்திருந்தது.தொடர்ந்து, நேற்று காலை 6 மணி நிலவரத்தின்படி, மாவட்டத்தில் 23.40 மி.மீ. மழை பெய்திருந்தது.இதில், பவானிசாகர் அணைப் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 13.80 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.இந்த நிலையில், ஈரோட்டில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மழை வருவது போல கருமேகங்கள் சூழ்ந்து, வானம் இருண்டிருந்தது. தொடர்ந்து, காலை சுமார் 9 மணியளவில் ஈரோடு நகரில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நசியனூர் ரோடு, திண்டல், உள்ளிட்ட பகுதிகளில் சற்று மிதமான மழை பெய்தது.இதனால், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ரெய்ன் கோட் அணிந்து சென்றனர்.இந்த மழை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதைத் தொடர்ந்து, லேசாக வெயில் அடித்தது. பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் வானம் இருண்டு மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.

The post 4 நாள் வெயிலுக்குப் பின் ஈரோட்டில் சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்