×

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் உல்லாசம்: தட்டிக்கேட்ட போலீசுக்கு அடி,உதை, 11 பேர் கைது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அத்துமீறி உல்லாசமாக இருந்ததை தட்டிக் கேட்ட போலீசை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தினகரன் கனகராஜ் (35) மற்ரும் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை பட்டாலியன் வேலுமணியும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கோயில் வளாகத்தில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வியாபாரிகள் 2 பேர், கோயில் புறக்காவல் நிலையம் பின்புறமுள்ள கடற்கரை வாட்சிங் டவர் பகுதியில் ஆணும், பெண்ணும் உல்லாசமாக உள்ளதாக கூறினர். இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். தினகரன் கனகராஜ், பைக்கை பார்க்கிங் செய்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பட்டாலியன் போலீஸ்காரர் வேலுமணி, அங்கிருந்தவரை விசாரித்தார். அவர், கோவை மேட்டுப்பாளையம் கீரைக்கடை 4வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பதும், ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்ததும் தெரிய வந்தது. அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிலரையும் பட்டாலியன் போலீஸ்காரர் வேலுமணி கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அனைவரும் சேர்ந்து போலீஸ்காரர் வேலுமணியை சரமாரியாக தாக்கி யூனிபார்மை கிழித்தனர். இதுகுறித்து வேலுமணி அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகுமார், உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் காவலரை தாக்கிய 17 வயது சிறுவன் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

* கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் 23வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 4ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டதால் மதியவேளையில் 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது பெரியசோரகை சீரங்கனூரை சேர்ந்த இருசாகவுண்டன்(25) வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இருசாகவுண்டனை தேடி வருகின்றனர்.

The post திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் உல்லாசம்: தட்டிக்கேட்ட போலீசுக்கு அடி,உதை, 11 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple beach ,Tiruchendur ,Thiruchendur temple beach ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...