×

சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலரை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது சிறப்பாக செயல்பட்ட தலைமை காவலர் தயாளனை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது ெசன்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி வெள்ள நீர் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு குழு உட்பட 18 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த 5ம் ேததி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் ஓஎம்ஆர் சாலை, விபிஜி அவென்யூ பகுதியில் உள்ள 13வது தெருவில் மழை நீர் சூழ்ந்து இருந்தது. இதனால் துரைப்பாக்கம் போலீசார் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பை மற்றும் கைக்குழந்தையுடன் தம்பதி ஒன்று வெளியேற முடியாமல் தவிர்த்தனர். இதை கவனித்த துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் தயாளன் ஓடிச்சென்று பெண்ணிடம் இருந்து கைக்குழந்தை மற்றும் அவர்களின் பையை வாங்கி கொண்டு பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்ந்தார்.

மீட்கப்பட்ட குழந்தை தலைமை காவலரை வியப்புடன் பார்த்து நன்றி கூறும் வகையில் அமைந்து இருந்தது. இந்த சம்பவம் இணையதளத்தில் பெரிய அளவில் வைரலாகியது. இதையடுத்து மீட்பு பணியின் போது சிறப்பாக செயல்பட்ட தலைமை காவலர் தயாளனை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

The post சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலரை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dayalan ,Migjam ,Sandeep Roy ,
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரணம்:...