×

மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் 2025-ல் 36 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டு மட்டும் 36 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் மதுபானம் தயாரித்தல், வர்த்தகம் செய்தல், சேமித்தல், போக்குவரத்து, விற்பனை உள்ளிட்டவற்றை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்த 9 ஆண்டுகளாக பீகாரில் மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், 2025ஆம் ஆண்டில் மற்றும் 36 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் 18.99 லட்சம் லிட்டர் மதுபானங்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகள் என்றும் 17.39 லட்சம் லிட்டர் நாட்டு சாராயம் வகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுவிலக்கு சட்டத்தை மீறியதாக 1.25 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதுவே 2024ஆம் ஆண்டில் 1.21 லட்சம் பேர் கைதானதாகவும் காவல்துறை தலைமை இயக்குநர் வினய்குமார் தெரிவித்தார். கள்ளச் சாராய சாவுகளை தடுக்க, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த 2025ஆம் ஆண்டில் மற்றும் 1.31 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் கள்ளச்சாராயம் பறிமுதல் மற்றும் கைதுகள் 30%சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத மது விற்பனை மூலம் சொத்துக்களை குவித்தவர்கள் மீது BNSS சட்டத்தின் பிரிவு 107-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Bihar ,Patna ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...