×

மல்லிகைப்பூ கிலோ ரூ.12 ஆயிரம்

 

மதுரை: பனியின் தாக்கத்தால் பூக்கள் வரத்து கணிசமாக குறைந்ததால் மதுரை மாவட்டத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மார்கழி தொடக்கம் முதலே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பூக்கள் வரத்தும் பெரும்பாலும் குறைந்தது. வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் வரை மல்லிகை வரத்து இருக்கும். இது சீசன் காலங்களில் சுமார் 15 டன் வரை அதிகரிக்கும்.

சராசரியாக 5 முதல் 8 டன் வரை வரத்து இருக்கும். கடும் பனியால் பூக்களின் விளைச்சல் குறைந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக 300 கிலோ மல்லிகை மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்தது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஒரு கிலோ மல்லிகை ரூ.6 ஆயிரத்தில் துவங்கி சிறிது நேரத்தில் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், தொடர் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை கிலோ ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், மளமளவென உயர்ந்து 12 மணியளவில் மல்லிகைப்பூ கிலோ ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Tags : Madurai ,Margazhi ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...