×

பொங்கல், குடியரசு தினம் முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

 

தண்டையார்பேட்டை: பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆபரேஷன் ஜான் ஜாக்ரன் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என்பது குறித்து ரயில்வே போலீசார் இன்று சோதனை நடத்தினர். இதுபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறப்பட்ட ரயில்களில் சோதனை நடத்தினர்.

மேலும் பெரம்பூர் வடக்கு கடற்கரை ரயில் நிலையம், ராயபுரம் ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் உள்ளிட்டவைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரயில் பயணிகள் கொண்டு வந்த பொருட்களை ஆராய்ந்து எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் உள்ளதா? என பரிசோதனை செய்தனர். இந்த சோதனை குடியரசு தினம் வரை நடத்தப்படும் என்று போலீசார் கூறினர்.

Tags : Central Railway Station ,Republic Day ,Pongal ,Dandiyarpettai ,John Jagran ,Chennai Central Railway Station ,Pongal Festival ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...