×

மணப்பாறையில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

மணப்பாறை, டிச.8: மணப்பாறையில் தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக “ஒன்றிணைவோம் – சமத்துவ சமுதாயம் காண்போம்” என்ற தலைப்பில் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பாக மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. மணப்பாறை காவல் ஆய்வாளர்கள் கோபி, கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போட்டியை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா, பள்ளி தாளாளர் செளமா ராஜரத்தினம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியில் லட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் பெரியார் சிலை பகுதியில் நிறைவுற்றது. அங்கு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள், மணப்பாறை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள், பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post மணப்பாறையில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.

Tags : Manaparai ,
× RELATED அரசு பேருந்து ஓட்டுனர்கள் 2 பேர் காயம்