×

கோபியில் போராட்டத்திற்கு தடை: தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்

 

கோபி,டிச.8: கோபி அருகே உள்ள வெங்கமேட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழி திருடியதாக இரண்டு வாலிபர்களை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னா் அவர்கள் மீது கோழி திருட்டில் ஈடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல வாலிபர்களை தாக்கியதாக கிராம மக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதை திரும்ப பெறக்கோரி பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அனுமதி மறுத்த கோபி போலீசார் நேற்றுமுன்தினம் தடை விதித்தனர். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதையடுத்து போராட்டமும் வாபஸ் பெறப்பட்டன. ஆனாலும் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபி நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளை எஸ்.பி. ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

The post கோபியில் போராட்டத்திற்கு தடை: தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Vengamet ,
× RELATED கோபி அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து..!!