×

மதுராந்தகத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்: நகர மன்ற தலைவர் வழங்கினார்

 

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார் நிவாரண பொருட்கள் வழங்கினார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டியது. இதனால், நகராட்சிக்குட்பட்ட 22 வார்டுகளில் கடுமையான மழைப்பொழிவால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

மேலும், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  இதனையடுத்து, மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார், திமுக நகர செயலாளர் குமார் ஆகியோர் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு அரிசி மூட்டை, மளிகைப்பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வழங்கினர். அப்போது, திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post மதுராந்தகத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்: நகர மன்ற தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,City council ,Madhurandakam ,president ,Malarvizhikumar ,Migjam storm ,Maduraandakam ,Dinakaran ,
× RELATED நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு