பேரிடர் மீட்பு பணியில் வணிகர் சங்க பேரமைப்பு: விக்கிரமராஜா தகவல்

சென்னை: பேரிடர் மீட்பு பணியில் வணிகர் சங்க பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் மிக்ஜாம் புயல் மிகப்பெரும் எதிர்பாராத பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. புயல், மழை ஆரம்பித்த நாளில் இருந்தே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது அமைப்பு சார்ந்த நிர்வாகிகளை கட்டமைத்து, பேரிடர் மீட்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, பேரமைப்பு தன்னார்வல நிர்வாகிகளுடன் நேரில் சென்று ரொட்டி, பிஸ்கட் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அளித்து ஆறுதல் கூறி அரசுக்கும் நிலைமையை எடுத்துக்கூறி நிவாரண உதவிகளை பெற்று தருவதற்கான உறுதி அளித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் நெருக்கடியான இக்காலகட்டத்தில் ஒருமித்த உணர்வோடும், மனித நேயத்தோடும் பணியாற்றி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், பொதுமக்களின் உதவிக்கு வராத ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து, அந்தந்த பகுதிகளில் உள்ள சிறு,குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

The post பேரிடர் மீட்பு பணியில் வணிகர் சங்க பேரமைப்பு: விக்கிரமராஜா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: