சென்னை: புயல் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை 14 அமைச்சர்கள் களத்தில் இறங்கி தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் வழங்கி வருகின்றனர்.