4 மாநில தேர்தல் முடிவுகள் பார்லி. தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது: திருமாவளவன் உறுதி

விழுப்புரம்: விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அளவிலான அனைத்து நிலை பொறுப்பாளர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: நடந்து முடிந்துள்ள 4 மாநில தேர்தல் முடிவுகள் எவ்வகையிலும், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது.

காரணம், அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது. இது எந்த வகையிலும் இந்தியா கூட்டணியை பாதிக்காது. நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்கவில்லை. அந்தந்த கட்சியினரும் தனித்தனியே நின்று தேர்தலை சந்தித்தனர். எனவே இதை எவ்வகையிலும் தேசிய அளவில் அமைந்துள்ள இந்தியா கூட்டணியோடு ஒப்பிடக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

The post 4 மாநில தேர்தல் முடிவுகள் பார்லி. தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது: திருமாவளவன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: