கனமழை காரணமாக

சென்னை: கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதித கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக்ததின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் அதி கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

The post கனமழை காரணமாக appeared first on Dinakaran.

Related Stories: