×

கலந்தாய்வு கூட்டம்

மல்லசமுத்திரம், டிச.3: மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஈஸ்வரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினர்.

தொடர்ந்து ஈஸ்வரன் எம்எல்ஏ பேசுகையில், பொதுமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அது குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, லோக மணிகண்டன், உதவி பொறியாளர்கள், அட்மா தலைவர் பழனிவேல், ரஞ்சித் குமார், கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Panchayat Union ,Iswaran ,Dinakaran ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்