×

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம்

நாமக்கல், டிச.3: நாமக்கல்லில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்துசெய்து, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும். ஜி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் கோரிக்கையை விளக்கி பேசினார்.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அத்தப்பன், பொது சுகாதாரத்துறை மனோன்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Abolish ,CBS Movement ,Namakkal ,CBS Abolition Movement ,Dinakaran ,
× RELATED நாமக்கல் தாலுகா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு