×

₹1 கோடியில் புதிய கட்டிடங்கள்

ராசிபுரம், டிச.3: ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ₹1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலக கட்டிடங்களை ககெல்டர் உமா முன்னிலையில், ராஜேஸ்குமார் எம்பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஊராட்சி சௌரிபாளையம், ராசிபுரம் ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சி, 85 ஆர்.குமாரபாளையம் ஊராட்சி, சந்திரசேகரபுரம் ஊராட்சி அக்ராஹாரம் ஆகிய பகுதிகளில் ₹1 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை ராஜேஸ்குமார் எம்பி., மற்றும் கலெக்டர் உமா ஆகியோர் நேற்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். அதன்படி வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஊராட்சி சௌரிபாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்(2021-2022) கீழ், ₹11.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 543 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2021-22ன் கீழ் ₹12.61 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் முத்துகாளிப்பட்டி குடித்தெரு, வி.ஐ.பி நகர் பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பயனடைவார்கள். சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ₹12.61 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 85.ஆர்.குமாரபாளையம் ஊராட்சியில், ஆர்.குமாரபாளையம் மற்றும் பனங்காடு கிராமங்களை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர் பயனடையும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2022-2023ன் கீழ் ₹9.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தொழிற்கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை பாதுகாத்து வைக்க 85.ஆர்.குமாரபாளையம் ஊராட்சியில் ₹10.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் விளைப்பொருள் வைப்பு கட்டடத்தை ராஜேஸ்குமார் எம்பி., கலெக்டர் உமா ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக வெண்ணந்தூர் ஒன்றியம், மதியம்பட்டி ஊராட்சியில் கூட்டுறவு துறையின் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், ₹36.20 லட்சம் மதிப்பீட்டில் போக்குவரத்து வாகனத்தினை ராஜேஸ்குமார் எம்பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்ட கவுன்சிலர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன். பில்லாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் அருளரசன், வர்த்தகரணி சிவகுமார், மாணவரணி சத்யசீலன், அயலக அணி முகேஷ், ஒன்றிய பொருளாளர் முத்துச்செல்வன், இளைஞரணி சிவசேகரன், விவசாய அணி பன்னீர்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் அருள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ₹1 கோடியில் புதிய கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Kakelter ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே பயங்கரம் மாயமான இளம்பெண் எரித்துக்கொலை