×

நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

 

நெல்லிக்குப்பம், டிச. 3: நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார், மேல்பட்டாம்பாக்கம் சந்தை தோப்பு அம்பேத்கர் சிலை பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில், ஒருவர் மட்டும் இறங்கி கொண்டு, மற்றொருவர் பைக் எடுத்து கொண்டு சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் அந்த நபரை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், மேல்பட்டாம்பாக்கம் சந்தை தோப்பு தெருவை சேர்ந்த திருமால் மகன் ரித்திஷ்(17) என தெரிய வந்தது. மேலும் ரித்திஷின் பாக்கெட்டில் 50 கிராம் எடை கொண்ட 4 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரித்திஷை கைது செய்தனர். மேலம் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, இவரிடம் எப்படி கஞ்சா பொட்டலம் வந்தது, பைக்கில் அழைத்து வந்து இறக்கி விட்டு சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை வருகின்றனர்.

The post நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellicupam ,Nellikupam ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!