×

விருத்தாசலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

 

விருத்தாசலம், டிச. 3: காரைக்காலில் இருந்து பெண்ணாடம் அருகே ஈச்சங்காட்டில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் தயாரிப்பதற்கான வெள்ளை மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் அருகே பொன்னேரி-சித்தலூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வரும் வாகனத்திற்கு வழி விடுவதற்காக லாரியானது சாலை ஓரம் சென்றபோது நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த வெள்ளை மண் முழுவதும் விவசாய நிலத்தில் கொட்டி வீணானது. மேலும் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் சாய்ந்ததால் மின் கம்பமும் சேதம் அடைந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருத்தாசலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Karaikal ,Echangat ,Pannadam ,Vriddhachalam ,Dinakaran ,
× RELATED சலூன் கடைக்காரர் தீக்குளித்து சாவு