×

வாக்குச்சாவடி மையம் அமைத்து அரசுப்பள்ளி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு

 

திருக்கழுக்குன்றம்: அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருக்கழுக்குன்றம் தேர்தல் பிரிவு சார்பில் “மாதிரி வாக்குச்சாவடி மையம்” அமைத்து, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் வாக்குச்சாவடி போன்று அமைத்து, 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் நாடகம் மற்றும் நடனத்தின் மூலம் வாக்களிப்பது நம் உரிமை, வாக்களிப்பது நம் கடமை என்றும், ஒரு விரல் உயர்த்துவோம், அதன் பெருமையை உணர்த்துவோம் எனவும், அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, தேர்தல் துணை வட்டாட்சியர் சத்யா, பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

The post வாக்குச்சாவடி மையம் அமைத்து அரசுப்பள்ளி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Government Girls Higher Secondary School ,Tiruppurur ,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா