×

ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் மின்சாரம் பாய்ந்து டிரைவர்கள் 2 பேர் பலி: போலீசார் விசாரணை

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 லாரி டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், புல்லலூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (33). லாரி டிரைவரான இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏறையூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து உதிரிபாகங்களை ஏற்றி செல்வதற்காக நேற்று லாரியை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து தொழிற்சாலை வாசல் முன்பு ஓரமாக லாரியை நிறுத்தியுள்ளார். பின்னர், கண்டெய்னர் லாரியின் பின்பக்க கதவுகளை திறந்தபோது, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மரில் உள்ள வயர்கள் மீது லாரியின் கதவுகள் உரசியது. இதில், அருண் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் துடித்துள்ளார்.

அப்போது அவ்வழியாகச் சென்ற மற்றொரு லாரி டிரைவரான கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமு (28) என்பவர் அருணை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் மின்சாரத்தை துண்டித்து, உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர்கள் 2 பேரும் பலியான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் மின்சாரம் பாய்ந்து டிரைவர்கள் 2 பேர் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kanchipuram district ,Pullalur ,Dinakaran ,
× RELATED பென்னலூர் ஊராட்சியில் மண் திருட்டை...