×

கொசு உற்பத்தியை ஒழிக்க ஆயில் பந்து தயாரிக்கும் பணி தீவிரம்

 

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளை சுற்றி காலியாக உள்ள நிலத்தில் தேங்கும் மழை நீரில் கொசு உற்பத்தியை ஒழிக்கும் விதத்தில் ஆயில் பந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையை முன்னிட்டு நகராட்சியில் மக்கள் குடியிருக்கும் வீடுகளைச் சுற்றி காலியாக உள்ள நிலத்தில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நின்றால் அதில் கொசு உற்பத்தி அதிகமானது.

கொசு தொல்லை மக்களை வாட்டி வதைக்கும் என்பதால் இதனை ஒழிக்கும் விதத்தில் ஆயில் பந்துகள் தயாரிக்கும்படி நகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு திமுக நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, நகராட்சி ஆணையாளர் தாமோதரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் பேரில் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் ஆயில் பந்துகள் தயாரிக்கும் பணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று தீவிரமாக நடைபெற்றது. நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் கழிவுநீருடன் மழைநீர் கலந்திருக்கும் இடங்களில் இந்த ஆயில் பந்துகள் எறியப்பட உள்ளன.

The post கொசு உற்பத்தியை ஒழிக்க ஆயில் பந்து தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,Nandivaram-Kudovanchery ,
× RELATED கோயம்பேடு – கூடுவாஞ்சேரி, கோயம்பேடு –...