உயிரிழப்புகளை தடுப்பதே முக்கிய நோக்கம் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் ராமசந்திரன், பகிர்மான இயக்குநர் மணிவண்ணன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்றனர். ஆய்வுக்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் உயிரிழப்பை தடுப்பதே முக்கிய நோக்கம் எனவே புயலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 3,00,000 மின் கம்பங்கள், 15,000கி.மீ. மின் கம்பிகள் மற்றும் 15,000 களப்பணியாளர்கள் 24/7 தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

* மின் கம்பி அறுந்து கீழே விழுந்திருந்தால்…
சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி மின் சாதனங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்திருந்தாலோ உடனடியாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்திற்கு 94987 94987 என்ற எண்ணிற்கோ அல்லது மின் தடை நீக்க மையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

The post உயிரிழப்புகளை தடுப்பதே முக்கிய நோக்கம் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: