இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வினோத்குமாருக்கு சுகுமாரனும், ஜானகிராமனும் அறிமுகமாகினர். அப்போது, இருங்காட்டுகோட்டை பகுதியில் இயங்கி வரும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து குறைந்த விலைக்கு ஸ்கிராப் வாங்கி தருவதாக வினோத்குமாருக்கு சுகுமாரும் ஜானகிராமனும் ஆசைவார்த்தை கூறினர். இதை வினோத்குமார் நம்பினார். இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, வினோத்குமாரிடம் இருந்து ரூ.25 லட்சம் இருவரும் வாங்கினர். ஆனால் அவர்கள் கூறியபடி, தனியார் தொழிற்சாலைகளில் இருந்து குறைந்த விலைக்கு இரும்பு ஸ்கிராப்பை வினோத்குமாருக்கு வாங்கி தரவில்லை.
பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. வினோத்குமாரை இருவரும் ஏமாற்றினர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் வினோத்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி ஜானகிராமன், அவரது நண்பர் சுகுமார் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தனியார் தொழிற்சாலையில் ஸ்கிராப் எடுத்து தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த பாஜ நிர்வாகி உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.
