மேலும் பால் உபபொருட்களின் விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களிடையே ஆவின் பால் உபபொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய் எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் ஜனவரி 20ம் தேதி வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யை பெற்று பயன்பெற வேண்டும்.
The post அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைப்பு: பண்டிகை காலத்தையொட்டி தள்ளுபடி appeared first on Dinakaran.
