×

குட்கா விற்ற கடைக்கு சீல்

குமாரபாளையம், டிச.1: பள்ளிகள் அருகே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ய அரசு தடைவிதித்துள்ளது. ஆனாலும் பல இடங்களில் இதை பொருட்படுத்தாமல் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்கப்படுவதாக, பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து குமாரபாளையத்தில், பள்ளிகள் அருகில் உள்ள 22 கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் போலீஸாருடன் திடீர் சோதனை நடத்தினார். இதில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

குப்பாண்டபாளையம் அரசு பள்ளி அருகே சுந்தர்ராஜன் என்பவரது மளிகை கடையில் சோதனை செய்த போது, அங்கு பல முறை அதிகாரிகள் எச்சரித்தும், அலட்சியப்படுத்தி தொடர்ந்து குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மளிகை கடையை மூடி சீல் வைத்தனர். இதே போல், பள்ளிபாளையம் நகராட்சி அக்ரஹாரம் பகுதியில் மளிகை மற்றும் கறிக்கடைகளில் சோதனை செய்தனர். தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளை அதிகாரிகள் கைப்பற்றி, கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

The post குட்கா விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Kumarapalayam ,Dinakaran ,
× RELATED பழநி பகுதியில் குட்கா விற்ற 9 கடைகளுக்கு சீல்