கருத்து கணிப்பு என்ன சொன்னாலும் 5 மாநில தேர்தலிலும் பா.ஜவுக்கு தோல்வி: அசோக் கெலாட் சொல்கிறார்

ஜெய்ப்பூர்: கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் ராஜஸ்தான் உள்பட 5 மாநில தேர்தலிலும் பா.ஜவுக்கு தோல்விதான் கிடைக்கும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும், பாஜ ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று நான் உணர்கிறேன். கருத்துக் கணிப்புகள் ஏதாவது சொல்லலாம், கருத்துக்கணிப்புகள் எதையாவது பரிந்துரைக்கலாம். ஆனால் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும். ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு தான் நாட்டிலேயே எந்த எதிர்ப்பும் இல்லாத அரசு.

வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் எதையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தது போல் எனது ஆட்சியையும் கவிழ்க்க முயன்றனர். ஆனால் அவர்கள் தோல்வி அடைந்தனர். அதனால், கோபமடைந்த அவர்கள், கோப மொழி பேசினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கருத்து கணிப்பு என்ன சொன்னாலும் 5 மாநில தேர்தலிலும் பா.ஜவுக்கு தோல்வி: அசோக் கெலாட் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: