×

ஈரோடு மாநகராட்சியில் ஒரு மாதத்தில் வரி தொடர்பாக 700 விண்ணப்பங்களுக்கு தீர்வு

 

ஈரோடு,டிச.1: ஈரோடு மாநகராட்சியில் ஒரு மாதத்தில் வரி தொடர்பாக 700 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளா்.ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு புதிதாக வரி செலுத்த விண்ணப்பித்தால் காலதாமதம் ஆகி வருவதை விரைவுப்படுத்தக் கோரியும், மாநகராட்சியில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளில் வசித்து வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கு தீர்வு காண கோரியும் கவுன்சிலர்கள் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் முறையிட்டனர்.

அப்போது, ஆணையாளர் கூறியதாவது:ஈரோடு மாநகராட்சியில் கடந்த 31 நாட்களில் வரி தொடர்பான 700 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களையும் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். டிடிசிபி எனப்படும் நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனர ஒப்புதல் பெறாத(அங்கீகரிக்கப்படாத) குடியிருப்புகளுக்கு மாநகராட்சி மூலம் வளர்ச்சி திட்ட பணிகள் செய்ய சட்டத்தில் இடமிருந்தால் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மேலும், டிடிசிபி அங்கீகாரம் இல்லாதவர்கள் தாங்களாகவே முன் வந்து டிடிசிபி அனுமதி பெற அந்த அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற முயற்சிக்க வேண்டும். டிடிசிபி அனுமதி பெறுவது குறித்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறினார்.

The post ஈரோடு மாநகராட்சியில் ஒரு மாதத்தில் வரி தொடர்பாக 700 விண்ணப்பங்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Erode Corporation ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் சொத்து வரி பாக்கி...