பங்குச்சந்தையில் இன்று பட்டியலிடப்பட்ட டாடா டெக்னாலஜீஸ் பங்கு 8 நாளில் முதலீட்டாளர்களுக்கு 162% லாபம்..!!

மும்பை: பங்குச்சந்தையில் இன்று பட்டியலிடப்பட்ட டாடா டெக்னாலஜீஸ் பங்கு 8 நாளில் முதலீட்டாளர்களுக்கு 162% லாபம் கொடுத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெக்னாலஜீஸ் ரூ.3,042.51 கோடி மூலதனம் திரட்ட சம பங்குகளை வெளியிட்டது. தலா ரூ.500 விலையில் மொத்தம் 6,08,50,278 பங்குகளை டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டது. நவம்பர் 22-24 வரை விற்பனைக்கு விடப்பட்ட டாடா டெக் பங்குகளை போல் 70 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சந்தையில் டாடா டெக்னாலஜீஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டன. வர்த்தகம் தொடங்கும் போதே டாடா டெக்னாலஜீஸ் பங்கு ரூ.700 விலை உயர்ந்து ரூ.1,200-க்கு விற்பனையானது. விண்ணப்பத்துடன் திரண்ட ரூ.1.56 லட்சம் கோடியில் ரூ.3,042.5கோடி போக மீதத்தொகை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டது. வர்த்தகநேர முடிவில், 500 ரூபாய் பங்கு தலா ரூ.813 அதிகரித்து 162.6% உயர்வுடன் 1,313 ரூபாயில் நிறைவடைந்தது.

The post பங்குச்சந்தையில் இன்று பட்டியலிடப்பட்ட டாடா டெக்னாலஜீஸ் பங்கு 8 நாளில் முதலீட்டாளர்களுக்கு 162% லாபம்..!! appeared first on Dinakaran.

Related Stories: