×

குட்கா விற்ற 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, நவ. 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பெட்டிக்கடையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெடிலம், திருநாவலூர், மடப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராமன் (62), சுகுமார் (44), ஐயப்பன் (27) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 3000 மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post குட்கா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Pettikadai ,Tirunavalur ,Ulundurpet, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது